இப்படியெல்லாமா புதுவருடத்தைக் கொண்டாடுவாங்க?

இப்படியெல்லாமா புதுவருடத்தைக் கொண்டாடுவாங்க?
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் வட்ட வட்ட மாக பிரிண்ட் செய்த உடைகள் அணிந்து உருண்டையான பழம் மற்றும் தின்பண்டங்களை சாப்பிடுவது அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகின்றனர்.

  • ஸ்பெயின் மேட்ரிட் நகரில் புதுவருடத்தை வரவேற்கும் விதமாக கடிகார கூண்டின் முன் கூடுவர்.சரியாக 12மணிக்கு 12செகண்டுகள்12தடவை அடிக்கும்போது 12திராட்சை பழங்களை சாப்பிடுவர்.

  • நார்வே மக்கள் அன்று அரிசியில் பல பண்டங்களை செய்து அத்துடன் கீர் செய்து பாதாம் பருப்பு சேர்த்து செய்கிறார்கள்.சாப்பிடும் போது யாருக்கு பாதாம் வருகிறதோ அவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம் என நம்புகின்றனர்.

  • இத்தாலியில் அன்று இரவு சிகப்பு டிராயர் அணிந்து வீதிகளில் வலம் வருவார்கள். இப்படி வலம் வந்தால் அந்த ஆண்டு முழுவதும் வாழ்க்கை இனிமையாக, சிறப்பாக இருக்கும் என நம்புகின்றனர்.

  • தென் அமெரிக்காவில் சில பகுதி மக்கள் தங்கள் வலது காலில் நின்று கொண்டு புது வருடத்தை வரவேற்கிறார்கள்.

  • பிரேசில் நாட்டில் வெள்ளை டிராயரை அணிவர். புது ஆண்டில் அமைதியும்,வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும் எனக் கருதி வெள்ளை உடையிலையே இருப்பர்.

  • டென்மார்க்கில் பீங்கான் பாத்திரங்களை உடைத்து வீடுகளில் போட்டு வைத்தால் அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகின்றனர்.

  • மெக்சிகோவில் டிசம்பர் 31ம் தேதி இரவில் தங்கள் மூதாதையர்கள் ஆவியை வரவழைத்து அவர்களிடம் அறிவுரை கேட்பார்கள்.

  • ஸ்லோவாக் பாரம்பரியத்தில் படி மேஜை விரிப்புக்கு அடியில் பணத்தையோ,மீன் செதில்களையோ வைப்பது வழக்கம். துரதிர்ஷ்டம் வராமல் தடுக்கவும் வளம் பெருகுவதை உறுதிப்படுத்துவதாகவும் இவ்வாறு செய்கிறார்கள்.

  • ஈக்வடார் மக்கள் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் காகிதத்தால் நிரப்பப்பட்ட பொம்மைகளை எரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தீய நிகழ்வுகள், விஷயங்களை எரித்து விடுவதால் மீண்டும் நடைபெறாது என்று நம்புகின்றனர்.

  • ஜப்பானில் 108முறை ஒலிகளை மணிகள் எழுப்புவதால், எல்லா மனித பாவங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்று நம்புகின்றனர். புத்தாண்டு அன்று சிரிப்பதும், மகிழ்ச்சியாக இருப்பதும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளம் என நினைக்கின்றனர்.

இவ்வாறு பல நாடுகளில் பல விதமான நம்பிக்கைகள் நிலவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com