அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்

வெள்ளை மாளிகையில் தீபாவளி: அதிபர் ஜோ பைடன் உற்சாகம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில், நேற்று விமரிசையாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அதில் அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார்.

 தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அதிபர் பைடன் அதில் குறிப்பிட்டதாவது;

 அமெரிக்க கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவே  தீபாவளி பண்டிகை மாறி விட்டது. வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் அளவில் இந்த ஆண்டு சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப் பட்டுள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் இருளை அகற்றி உலகிற்கு வெளிச்சம் தரும் ஆற்றல் உள்ளது என்பதை தீபாவளி பண்டிகை நினைவூட்டுகிறது.

-இவ்வாறு உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார், அதிபர் ஜோ பைடன். இப்பண்டிகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பின்னர் அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவளியினருடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com