தீபாவளி முகூர்த்த டிரேடிங்; 1 மணி நேர பங்குச் சந்தை!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகியவை தீபாவளி பண்டிகை மற்றும் லக்ஷ்மி பூஜையை முன்னிட்டு இம்மாதம் 24-ம் தேதி விடுமுறை விடப்படுகிறது.

ஆனாலும் தீபாவளி முகூர்த்த டிரேடிங் என்று அன்றைய தினம் இரண்டு பங்குச் சந்தைகளும் ஒரு மணி நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகாலமாக பாரம்பரியமாக தீபாவளி பண்டிகையன்று ‘தீபாவளி முகூர்த்த டிரேடிங்’ என்ற பெயரில், இந்த 2 பங்குச் சந்தைகளிலும் ஒரு மணி நேரம் வர்த்தகம் நடைபெறுகிறது. தீபாவளி நன்னாளில் நடைபெறும் இந்த முகூர்த்த வர்த்தகத்தால் ஆண்டு முழுவதும் செல்வத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

அதன்படி, ஈக்விட்டி மற்றும் டெரிவேடிவ்ஸ் பிரிவில் வர்த்தகம் மாலை 6:15 மணிக்கு தொடங்கி இரவு 7:15 மணிக்கு நிறைவடையும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த தீபாவளி முகூர்த்த டிரேடிங் நேரத்துக்காக காத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com