என் அனுமதியில்லாமல் யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது - டெஸ்லாவிற்கு எலான் மஸ்க் உத்தரவு!
டிவிட்டர் நிறுவனத்தில் அடுக்கடுக்காக அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் எலான் மஸ்க் அந்த வரிசையில் இப்போது மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் பழைய CEO எலான் மஸ்க் தன் அனுமதியில்லாமல் புதியாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாகவே தனது நிறுவனங்கள் குறித்து எலான் மஸ்க் எந்த ஒரு முடிவை எடுக்கவும் தயங்குவது இல்லை. கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தில் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டன், உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க். தினமும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை உலகிற்கு வெளியிடுவது அவரது வாடிக்கை. இதனிடையே, மின்சார கார் நிறுவனமான டெஸ்லா கடந்த காலாண்டில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த வருமானத்தையே பெற்றுள்ளது. போட்டி அதிகரித்துள்ளதால் டெஸ்லா கார்களில் விலையையும் குறைத்து வருகிறது. டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அதிரடி செய்திகள் வராத நாட்களே இல்லை எனலாம். டிவிட்டரும் அதன் சர்ச்சைகளும் என தினமும் அதனை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதியாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். வாரம் தோறும் புதிதாக வேலைக்கு ஆள் சேர்க்க அனுமதி வேண்டுமென நிர்வாகத்தினர் எனக்கு மெயில் அனுப்புகின்றனர். ஆனால், என் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் யாரும் சேர்க்கக்கூடாது. எனது அனுமதி மெயில் இல்லாமல் டெஸ்லாவில் ஒரு காண்டிராக்டர் கூட சேர்க்கக் கூடாது' என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.