வேலை வேண்டுமா? 60000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ... எந்த நாட்டில் தெரியுமா?

வேலை வேண்டுமா? 60000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ... எந்த நாட்டில் தெரியுமா?

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனியில் தற்போது பல கொள்கை மாற்றங்களை அறிவித்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளது. ஜெர்மனியின் கொள்கை மாற்றத்திற்கு பிறகு வருடத்திற்கு சுமார் 60000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜெர்மனி அரசு 3 பிரிவுகளில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்கிறது.

1 . ப்ரொபஷனல் அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள்

2 . குறைந்தது 2 வருட அனுபவம் கொண்ட ஊழியர்கள்

3. opportunity card வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்

ஜெர்மனியில் வேலை தேடிக்கொள்ள முடியும் என நம்புவோர் இந்த வாய்ப்பை தேர்வு செய்து ஜெர்மனியில் குடியேறலாம்

ஜெர்மனியின் கொள்கை மாற்றத்திற்கு மத்தியில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையிலான ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டினருக்கு ஜெர்மானிய மொழி கட்டுப்பாடிலும் சில தளர்வுகளை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது.

ஜெர்மனியின் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த பல முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளது. உற்பத்தி முதல் சேவை துறை வரையில் அனைத்திலும் வர்த்தகத்தை உருவாக்குவது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு வருகிறது.

ஜெர்மனி அரசு குடியேற்றம், திறன் பயிற்சி மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே இருந்து வரும் மக்களுக்கு குடியேற்றத்தை ஊக்குவித்தல் தொடர்பான கொள்கை சீர்திருத்தங்களை வெளியிட்டது. இந்த சீர்திருத்தை வெளியிட முக்கியமான காரணம் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க ஓலாஃப் ஸ்கோல்ஸின் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எங்கள் திறமையான தொழிலாளர் தளத்தை பாதுகாப்பது ஜெர்மனியின் மிகப்பெரிய பொருளாதார பணிகளில் ஒன்றாகும் என்று தொழிலாளர் அமைச்சர் ஹூபர்டஸ் ஹெய்ல் கூறினார். 2022 இல் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கு மிக உயர்ந்ததாக இருந்தது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இப்புதிய சீர்திருத்தம் மூலம் ஐரோப்பா யூனியனுக்கு வெளியில் இருந்து வருடத்திற்கு சுமார் 60000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜெர்மனி நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com