நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர் !

நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர் !

லகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், முன்னணி சமூக வளைதளமான ட்விட்டரை கடந்த வருடம் விலைக்கு வாங்கினார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த அவர், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிக்கொண்டார். இதற்கான தொகையை செலுத்த தற்போது தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்று வருகிறாராம்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையோடு வாழ்ந்த எலான் மஸ்க், தற்போது மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்து, ‘உலக அளவில் பெரும் நஷ்டத்தை சந்தித்தவர்’ என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனால், 320 பில்லியன் டாலராக இருந்த எலானின் சொத்து மதிப்பு (26 லட்சம் கோடி ரூபாய்) கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் சரிவைக் கண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 15 லட்சம் கோடி ரூபாயாகும்.

இந்த மிகப்பெரிய சரிவைத் தொடர்ந்து, கடந்த 2000ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் மசயோஷி சன் 58.6 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இது இந்திய மதிப்பில் ஐந்து லட்சம் கோடி ரூபாயாகும். தற்போது அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நஷ்டத்தில் கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்துள்ளார் எலான் மஸ்க். நஷ்டத்தில் சாதனை படைத்த உலகின் முதல் மனிதர் என்ற பெயர் தற்போது இவருக்குத்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com