இந்தியாவின் சுதந்திர தினத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டாட முடிவு!

இந்தியாவின் சுதந்திர தினத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டாட முடிவு!

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாட முடிவு பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டுக்குழு முடிவுச் செய்துள்ளது.

இந்தியா பிரிட்டன் இடையே நட்புறவை மேம்படுத்தவும், பிரிட்டனினுடைய முக்கிய சிறுபான்மை சமூகமான இந்திய வம்சாவளியினருடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் பொருட்டும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கிளை அமைப்பாக இந்தியா - பிரிட்டன் 1928 சிந்தனை அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் இருநாடுகளினுடைய நட்புறவு சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் அந்த அமைப்பினுடைய ஆலோசனையை ஏற்று இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் பொருட்டும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாகத்தை நினைவு கூற ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதை வருடாந்திர நிகழ்வாக எடுத்துச் சொல்லும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டன் வர்த்தக அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரிட்டனுக்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பேசுகையில், இந்த நிகழ்வு வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தபோது பிரதமர் கிளேமென்ட் அட்லி அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறினார். தொடர்ந்து பேசிய மற்ற உறுப்பினர்கள் இரு நாடுகளுக்கிடையான வர்த்தகம், முதலீடு, தொற்று நோய் தடுப்பு, பருவநிலை மாற்ற எதிர்ப்பு செயல்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கு இந்த முயற்சி பெரிதும் பங்காற்றும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி கூறுகையில், தவறுகளை பின் திரும்பிப் பார்த்து முன்னோக்கி செல்வது மக்களுடைய பழக்க வழக்கம். மேலும் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினரின் வளர்ச்சி இரு நாடுகளுக்கும் பெருமை அளிக்கும் முயற்சி ஆகும் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com