"பாலோயர்ஸ்" மாயம்! பேஸ்புக்கில் பரபரப்பு!

பேஸ்புக்
பேஸ்புக்

சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக்கை பயன்படுத்தும் பலர், அவர்களை பின்தொடர்பவர்களின் (பாலோயர்ஸ் ) எண்ணிக்கை திடீரென அதிகளவில் குறைந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தன் டுவிட்டர் பதிவினில் பேஸ்புக் உருவாக்கிய சுனாமி, பின்தொடர்பவர்களில் (பாலோயர்ஸ் ) ஒன்பது லட்சம் பேரை அடித்து சென்றுவிட்டதாகவும்,வெறும் 9,000 பேர் மட்டும் நிற்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான 'மெட்டா'வின் நிறுவனரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க்கும் இதற்கு தப்பவில்லை.

மார்க் ஜுக்கர்பெர்க்
மார்க் ஜுக்கர்பெர்க்

அவர் கிட்டத்தட்ட 11.9 கோடி பேரை இழந்துவிட்டதாகவும், தற்போது எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து,மெட்டாவின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் கூறியதாவது:

சிலருடைய பேஸ்புக்பு ப்ரொபைலில், அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து உள்ளதாக காட்டுகிறது, இது விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.

இதனால் ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டிருக்குமானால், அதற்காக மன்னிப்பு கோருகிறோம் என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com