
பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்களின் நிறுவனமான மெட்டா பெரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்காக மெட்டா நிறுவனத்தில் கிட்டத்தட்ட87,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இதனால் மெட்டா பணி நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2023ம் ஆண்டு மார்ச் வரை புதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சாத்தியகூறுகள் மட்டும் உள்ளன.
அமெரிக்காவில் இயங்கும் ஊடகத்தில் வெளியான தகவல்களின்படி, மெட்டா நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், பண நீக்கம் இந்த வார இறுதியில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது. பொருளாதார மந்த நிலை உருவாகும் என்ற அச்சம் நிலவுவதால் பல நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களுக்காக செலவு செய்யும் தொகை அளவை குறைத்துள்ளனர்.
மெட்டா நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் மெட்டா நிறுவனத்தின் சி இ ஓ மார்க் ஜுக்கர்பெர்க் எதிர்பார்த்த அளவு லாபம் மற்றும் வருமானம் என எதுவும் கிடைக்கவில்லை.
மூன்றாவது காலாண்டில் மெட்டா நிறுவனத்தில் லாபம் 4.4 பில்லியன் டாலர் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 52 சதவிகிதம் லாபம் குறைந்துள்ளது. இதனால் மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை 25% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 600 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்துள்ளது.
மெட்டா நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என மெட்டா நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.