விண்வெளிக்கு சென்ற முதல் அரபு தேசத்து வீராங்கனை!

விண்வெளிக்கு சென்ற முதல் அரபு தேசத்து வீராங்கனை!

பொதுவாக இஸ்லாமிய மார்கத்தில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு என கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமிய பெண்கள் அதிக கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டிய நிலை உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இதுபோன்ற பிம்பங்களை எல்லாம் தன்னுடைய கல்வி அறிவால் தகர்த்து வெளிவர முடியும் என நிரூபித்திருக்கிறார் சவுதி அரேபியாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான ரய்யானா பர்னாவி.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கொண்ட நாடு என கருதப்படும் சவுதி அரபியாஅரசு, அந்த அடையாளத்தை அழிக்க தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒருபகுதியாக விண்வெளி திட்டத்தில் பெண் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க முடிவுச் செய்தது. இதனையடுத்து சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக ரய்யானா பர்னாவி என்ற மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரை தேர்ந்தெடுக்கு. அவர்களுக்கு விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி அளிக்க திட்டமிட்டது. விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் சவுதி அரேபியாவுக்கும் ஐக்கிய அமீரகத்துக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக போட்டி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (இன்டர்நேஷ்னல் ஸ்பேஸ் சென்டர்) முன்னாள் சவுதி ராணுவ வீரரான அலி அல் கர்னியுடன் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவியை உடன் அனுப்ப திட்டமிட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் ரய்யானா பர்னாவி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் ரய்யானா பர்னாவி

இந்த பின்னணியில் அமெரிக்காவின் ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற நிறுவனம், விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான பயணத்திற்கு சவுதி அரசு நிதியுதவி செய்கிறது.

 இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன் 9 ராக்கெட் மூலம்  சவுதி அரேபியாவைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி நான்கு பேர் கொண்ட குழுவினருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை  சென்றடைந்தனர். இதன்மூலம் சவுதி அரேபியாவில் இருந்து முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் ரய்யானா பர்னாவி.இக்குழுவினர் விண்வெளி நிலையத்தில் ஒருவாரம் தங்கியிருந்து பின் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com