இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை!

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தன் மீதான 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது இம்ரான் கான், அந்நாட்டு அரசு கருவூலத்தில் இருந்த வெளிநாட்டு தலைவர்களின் பரிசு பொருட்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்று ஊழைல் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. உடனடியாக, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டார்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இம்ரான் ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இந்தாண்டு இறுதியில் பிரதமர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஊழல் வழக்கில் கைதான இம்ரான் கான்,5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனிடையே, இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், அட்டோக் சிறையில் இம்ரான் கானை சித்ரவதை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com