தேர்தலில் முறைகேடு செய்ய முயன்றதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது வழக்கு!

டொணால்ட் ட்ரம்ப்
டொணால்ட் ட்ரம்ப்

2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும் ஜோப்பிடனுக்கும் இடையான போட்டி மிகக் கடுமையாக இருந்தது. அப்போது அதிபராக இருந்த ட்ரம்பினுடைய தொடர் நடவடிக்கைகள் அவர் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட காரணமாக இருந்தது. இதன் விளைவாக ஜோப்பிடனே தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் கூறிவந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், மேலும் தோல்வி அடையும் பட்சத்தில் அதிபராகவே நீடிக்க முயற்சிகள் எடுத்ததாகவும், அதற்காக பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளை செய்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டு, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுச் செய்து, 45 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியில் ட்ரம்ப் ஈடுபட்டு வந்தார். இந்த நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, அவருக்கு பின்னடைவை ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர் மீது ஏற்கனவே 3 வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது 4வது வழக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று ரொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com