வேலை செய்ங்க... இல்லாட்டி வீட்டுக்கு கிளம்புங்க! உயர் அதிகாரிகளுக்கு மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை!

Meta
Meta

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவில் இருக்கும் அனைத்து மேனேஜர்கள் மற்றும் டைரக்டர் பதவிகளில் இருப்பவர்கள் தனி நபராக அவர் அவர் வேலையில் பங்களிக்க வேண்டும் இல்லையெனில் பணியை விட்டு வெளியேறுங்கள் என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேனேஜர் மற்றும் டைரக்டர் புதவிகளில் இருப்பவர்கள் இனி வரும் காலக்கட்டத்தில் எப்போதும் அனுப்பும் பர்பாமென்ஸ் ரிவ்யூவ் அறிக்கை உடன் டைரெக்டிவ் ரிப்போர்ட் அதாவது அவர்களுடைய தனிநபர் பங்களிப்பு என்ன என்பதை விளக்கும் அறிக்கைய சமர்ப்பிக்க உத்தரவு வெளியாகியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா பிளாட்பார்மஸ் 2022 ஆம் ஆண்டில் 12000 ஊழியர்களை ஓரே நேரத்தில் பணி நீக்கம் செய்திருந்தது. தற்போது நிறுவனத்தில் இருக்கும் அனைத்து மேனேஜர் மற்றும் டைரக்டர் புதவிகளில் இருப்பவர்களை வெறும் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்யாமல், தனிநபராக வேலையில் பங்களிக்கும் வகையில், கோடிங், டிசைன் போன்று அவர் பணியாற்றும் பிரிவில் கூடுதலான பங்களிப்பு அளிக்க வேண்டும் இல்லையெனில் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுங்கள் என மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளார்.

மெட்டா பிளாட்பார்மஸ் மொத்தமாகத் திறமைமிக்க அமைப்பாக மாறி வரும் வேளையில், நிறுவனத்தில் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக மார்க் ஜூக்கர்பெர்க் இந்த அறிவிப்பை மிகவும் கடுமையாக எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளார்.

மெட்டா பிளாட்பார்மஸ் 2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் ஊழியர்களுக்கு அதிகப்படியான பணிச் சுமை, டைட் டெட்லைன் அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. தற்போது இந்த நெருக்கடியை உயர் மட்ட அதிகாரிகளும் எதிர் கொண்டு வருகின்றனர். மேலும் மெட்டாவில் செலவுகளைக் கூடுதலாகக் குறைக்க 2வது, 3வது சுற்றுப் பணி நீக்கத்திற்கும் தயாராகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com