டிராபிக் ஜாமுக்கு குட் பை; வந்தாச்சு பறக்கும் கார்!

பறக்கும் கார்
பறக்கும் கார்

லகில் புதுப்புது வாகனங்கள் அதிகரித்தாலும், டிராபிக்ஜாம் பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. இந்நிலையில் துபாயில் பறக்கும் கார்களை அறிமுகப் படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

தற்போது பறக்கும் கார் ஒன்று சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்துள்ளதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி துபாயில் நேற்று முன்தினம் (அக்டோபர் 11) சோதனை ஓட்டமாக பறக்க விடப்பட்ட போது, இந்த பிளையிங் கார் வெற்றிகரமாக தரை இறங்கியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த பறக்கும் காரை மேலும் சீனாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான X-peng தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் அடுத்த தலைமுறை வாகனங்களில் இந்த பறக்கும் கார் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் சீன நிறுவனமான எக்ஸ் பேங்க் இதற்கு 20 மில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இது முக்கியமான எலக்ட்ரிக்கல் வாகனங்களில் ஒன்றாக அமைந்துள்ள இந்த ஃபிளையிங் காருக்கு துபாயில் மிகுந்த வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com