சீனாவில் கடும் மூடுபனி; அடுத்தடுத்து 200 கார்கள் மோதி விபத்து!

விபத்து
விபத்து

சீனாவில் கடுமையான மூடுபனி காரணமாக அங்குள்ள பாலம் பனியால் உறைந்து, அதன் வழியாகச் சென்ற 200-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஹெனான் என்ற நகரிலுள்ள ஜெங்சின் ஹுவாங்கே பாலத்தில் நேற்று அதிகாலை கடும் மூடுபனி காரணமாக சாலைகள் பனியால் உறைந்து பாதைகள் மறைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த பாலம் வழியாகச் சென்ற வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களையும் பாதையையும் அறிய இயலாமல் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் என அடுத்தடுத்து வந்த 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி சிதைந்த கார்கள் ஒன்றின் மேல் ஒன்றாக குவிக்கப்பட்டு கிடக்கின்றன. இதில் பெரிய லாரிகள் உட்பட பல வாகனங்கள் விபத்தில்  சிக்கியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் அத்துடன் பாலத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்த மீட்புப் பணிக்காக 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 70 தீயணைப்பு மீட்புப் பணியாளர்கள் இதுவரை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com