ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான Airbnb 2வது சுற்று பணி நீக்கம்!

ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான Airbnb 2வது சுற்று பணி நீக்கம்!

உலகளவில் பிரபலமான ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான Airbnb மீண்டும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து 2வது சுற்று பணி நீக்கத்தை அறிவித்து வருகிறது. இதனால் டிஜிட்டல் மற்றும் டெக் சேவையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

ஏற்கனவே கொரோனா காலத்தில் காரணத்தால் வர்த்தகம் 90 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு வருவாய் அளவில் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. Airbnb நிறுவனம் முதல் பணி நீக்க சுற்றில் அனைத்து பிரிவுகளிலும் கணிசமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இக்காலக்கட்டத்தில் ஏறக்குறைய 1900 ஊழியர்கள் Airbnb நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதமாகும்.

ஆனால் இந்த முறை ஆட்சேர்ப்பு ஊழியர்கள் அதாவது recruiting பிரிவில் மட்டுமே சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.2022 இல் Airbnb வருவாயில் வளர்ச்சியைப் பதிவு செய்த நேரத்திலும் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ஹாஸ்பிடாலிட்டி பிரிவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Airbnb நிறுவனத்தின் நிகர வருமானம் இப்போது 1.9 மில்லியன் டாலர்களாக உள்ளது. ​​Airbnb தளத்தில் தற்போது சுமார் 6800 பணியாளர்கள் உள்ளனர் மற்றும் சமீபத்திய பணிநீக்கம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் வெறும் 0.4 சதவீத ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பிப்ரவரி மாதம், Airbnb நிறுவனம்2023 இல் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இருப்பினும், Airbnb பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக இப்போது Bloomberg தெரிவித்துள்ளது, இதோடு இந்நிறுவனத்தின் பணியமர்த்தும் ஊழியர்களில் சுமார் 30 சதவீதத்தை பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் Airbnb நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிப்பதில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தேவைக்கு அதிகமாக இருக்கும் இடத்தில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள காலக்கட்டத்தில் முக்கியமான சந்தையிலும், பிரிவுகளிலும் புதிய ஊழியர்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com