சதாம் உசேன் கைதானது எப்படி?

சதாம் உசேன் கைதானது எப்படி?

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபராக இருந்தவர் சதாம் உசேன். அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டவர்.  ஈராக் நாட்டின் அதிபராக   1979 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேல் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டது.  

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 

அதிபர் சதாம் உசேன் உயிரிழந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரை கைது செய்தபோது நிகழ்ந்த பல்வேறு பரபரப்பு நிகழ்வுகளை முதல் முறையாக வெளியில் பகிர்ந்து இருக்கிறார் கெவின் ஹாலாண்ட்.

ஈராக் போர், சதாம் உசேன் கைது, இது குறித்து இணையத்தில் எக்கச்சக்கமான செய்திகள் கொட்டிக்கிடக்கும் நிலையில்  அதிலெல்லாம் இடம்பெறாத   பல அறிய சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த "டேஞ்சர் கிளோஸ்" எனப்படும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் டெல்டா படையை சேர்ந்த கெவின் ஹால்லாண்ட்,

ஈராக் போரின்போது தலைமறைவாகி இருந்த சதாம் உசேன் பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஒரு சிறிய விவசாய ஊரில் உள்ள ஒரு குழியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் அப்பகுதிக்கு சென்றோம். அவர் பதுங்கி இருந்த குழியை கண்டுபிடித்தோம்.  

அந்த பதுங்கு குழி முழுவதும் இலைகளால் மூடப்பட்டு இருந்தது. சுவாசத்திற்காக மட்டும் ஒரு சிறிய பைப் அதில் வைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் அந்த குழியை சூழ்ந்து இருந்த மணல் மற்றும் இலைகளை அகற்றிவிட்டு பார்த்தோம். அதில் யாரோ ஒருவர் மறைந்து இருப்பதை உறுதிசெய்தோம். ஒரு கையெறி குண்டு வீசினோம். அப்போது அரபு மொழியில் யாரோ பேசுவதை எங்களால் கேட்க முடிந்தது. அதன் பின்னர் அந்த குழியில் இருந்து கைகள் வெளியே வந்தன. அவரின் தலையில் அதிக முடி சிக்கு படிந்து இருந்தது. அவர் தான் சதாம் உசேன்.

அவரை குழியில் இருந்து வெளியே தூக்கினோம். அப்போது அவரிடம்   கிளாக் 18 ரக துப்பாக்கி இருந்தது. அதை அவரிடமிருந்து பிடுங்கி கொண்டோம்.  அதன் பிறகு சதாம் உசேன் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார்.

'நான் தான் ஈராக்கின் அதிபர். உங்களோடு நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்' என்று அவர் ஆங்கிலத்தில் பேசினார்.

 அதற்கான நேரம் முடிந்துவிட்டது என்றோம். அவர் மிகவும் ஆபத்தானவர் என்பதை புரிந்துக்கொண்டோம். ஆனால் அவர் எந்த பயமும் இன்றி தைரியமாக இருந்தார்.

டிசம்பர் 13, 2003 அன்று  சதாமை   கைது செய்தோம். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006ல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 30, 2006 அன்று காலை சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com