மல்யுத்த வீரரை ஜெயித்தாலும் 8 ஆண்டுகள் வலியால் துடித்தேன்: எலான் மஸ்க்!

மல்யுத்த வீரரை ஜெயித்தாலும் 8 ஆண்டுகள் வலியால் துடித்தேன்: எலான் மஸ்க்!

கோடீஸ்வரரான எலன் மஸ்க் டுவிட்டர் அதிபரானதிலிருந்து ஏதாவது ஒரு காரணத்துக்காக அடிக்கடி பேசப்படுகிறார். எனினும் இந்த முறை சுமோ மல்யுத்தவீரருடன் அவர் சண்டையிடும் பழைய படம் விடியோவில் வைரலாகியுள்ளது. அந்த விடியோ, எலன் மஸ்க்குக்கு இவ்வளவு பலமா? என்று கேட்குமளவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டோகிடிஸைனர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். சுமோ மல்யுத்த வீர்ருடன் கோதாவில் இறங்கியுள்ளார் எலன் மஸ்க் என்று விடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள எலன் மஸ்க் இந்த சண்டையால் எனது முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் வலியால் துடித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடியோவை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். “வாவ்… இதுவும் உங்கள் சாதனையா? இன்னும் என்ன பாக்கியிருக்கிறது என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் உச்சம் தொடவேண்டும் என்ற உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் என்று மற்றொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒரிஜனலாக இந்த விடியோவை எலன் மஸ்க் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார். முன்னாள் ரஷிய உளவுத்துறை ஏஜெண்டும் ரஷிய அதிபருமான விளாடிமிர் புதினை எதிர்க்கும் திறன் உங்களுக்கு உண்டா என்று பினான்ஸ் தலைமைச் செயலர் இயக்குநர் சாங்பெங் எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த விடியோவை எலன் மஸ்க் பதிவிட்டிருந்தார்.

“பிரதர் நீங்கள் வெற்றிபெற விரும்புகிறேன். ஆனால், உண்மை என்னவெனில் உங்களின் குங்ஃபூ விடியோவை நான் பார்த்ததில்லை” என்று அவர் பதிலுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

நான் சுமோ மல்யுத்த வீரரை கஷ்டபட்டு வீழ்த்தினேன். ஆனால், இதன் விளைவாக எனது முதுகு தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகள் வலி தாளாமல் அவதிப்பட்டேன். ஒருவழியாக பின்னர் அந்த பிரச்னை சரியானது என்று எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com