பொருளாதாரத்தில் இந்தியா 3-வது பெரிய நாடாகும்: சர்வதேச மோர்கன் ஸ்டான்லி வங்கி!

மோர்கன் ஸ்டான்லி வங்கி
மோர்கன் ஸ்டான்லி வங்கி

உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கி மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

 'இது இந்தியாவின் சகாப்தம் என்பது ஏன்?' என்ற தலைப்பில் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஆதில் கூறியுள்ள தகவல்கள்;

 இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடும் மேம்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பும் இந்தியாவை 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக உலகின்  3-வது பெரிய நாடாக நிலைபெறச் செய்யும். இந்தியாவின் வளர்ச்சியில் ஆதார் கார்டு கொண்டு வந்தது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் நிதிப் பரிவர்த்தனையை ஆதார் எளிமைப் படுத்தியுள்ளது. அதனாலேயே சமூக நலத்திட்டங்கள் மக்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்புவது எளிமையாகியுள்ளது.

 மேலும் சர்வதேச நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு வேலைகளை இந்தியாவிலிருந்து செய்பவர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயரும்.

தற்போது இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,278 டாலராக உள்ளது. 2031-ல் இது 5,242 டாலராக உயரும். ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயரும். இந்தியாவின் தனிநபர் வருவாய் உயர்வு, இளைஞர்களின் எண்ணிக்கை, தீவிர நகர்மயமாக்கல் ஆகியவை காரணமாகவும் 2030-ல் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இருக்கும்.

 பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டிலிருந்து மாற்று எரிசக்தி பயன்பாட்டை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து வருகிற நிலையில் அடுத்தப் பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறை சார்ந்து 70,000 கோடி டாலர் (ரூ.58லட்சம் கோடி) முதலீடு உருவாக வாய்ப்புள்ளது.

 -இவ்வாறு  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com