அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் லே ஆப் கலக்கத்தில் ஊழியர்கள்!

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் லே ஆப்  கலக்கத்தில் ஊழியர்கள்!

கடந்த ஆண்டில் இந்தியாவில் அனைத்து முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களும் வர்த்தகப் பாதிப்பு, முதலீடு ஈர்ப்பதில் தோல்வி, நிதி ஆதாரம் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பெரிய ஆபத்து இருக்காது என்று தான் நினைத்திருந்தனர்

ஆனால் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் அனைத்தும் அடுத்தடுத்துப் பணிநீக்கத்தை அறிவித்த காரணத்தால், ரெசிஷன் அச்சத்தால் இந்திய நிறுவனங்களும் தற்போது பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் பணம் இல்லாமல் தான் இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட நிலையில் 2023 ஆம் ஆண்டில் போதுமான நிதி ஆதாரம் இருக்கும் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்துள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நிறுவனங்களின் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் சுமார் 2000க்கும் அதிகமாக ஊழியர்களை 20 நாட்களில் பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது .

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 3 வாரத்தில் மட்டும் 2100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் EDTECH துறை மற்றும் பிற டிஜிட்டல் சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காப்பாற்ற 1060 ஊழியர்களை மட்டுமே பணிநீக்கம் செய்த நிலையில், 2023 முதல் 3 வார எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

வட்டி விகிதத்தை அதிகளவில் உயர்த்தியது. இதனால் சந்தையில் பணப்புழக்கம் குறைந்தது மட்டும் அல்லாமல் முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் புதிய முதலீடுகள் செய்வதைப் பெரிய அளவில் குறைத்தது. 18000 ஊழியர்கள் பணிநீக்கம் இதன் எதிரொலியாக 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது.

2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 52 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் funding winter-ல் மாட்டிக்கொண்டு சுமார் 17,989 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. முக்கியத் துறைகள் எட்டெக், கன்ஸ்யூமர் சர்வீசஸ், ஈகாமர்ஸ், ஹெல்த் டெக், லாஜிஸ்டிக்ஸ், பின்டெக், என்டர்பிரைஸ் டெக், மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட், அக்ரிடெக், கிளீன்டெக் எனப் பல துறையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து சுமார் 18000 ஊழியர்களை 2022 ஆம் ஆண்டில் மட்டும் பணிநீக்கம் செய்துள்ளது.

Edtech துறை கடுமையான பாதிப்பு 2022 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நடந்த 18000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் 44 சதவீத பணிநீக்கம் எட்டெக் (Edtech) துறையில் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது. முன்னணி 15 நிறுவனங்கள் இந்த 44 சதவீத பணிநீக்கத்தைச் செய்துள்ளது ஊழியர்களிடையே

அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com