லே ஆஃப் செய்ய போகிறதா அமேசான்? ஊழியர்கள் கலக்கம்!

அமேசான்
அமேசான்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமேசான் செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த பணிநீக்க நடவடிக்கையை செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிவிட்டர் , மெட்டா போன்ற பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் லே ஆப் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து தற்போது அமேசானும் இவ்வாறு ஆட்குறைப்பில் ஈடுபடுவது கவலை தருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Amazon
Amazon

அமேசான் வட்டாரங்கள் தெரிவிப்பதுபோல் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம்செய்யப்பட்டால் அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய பணி நீக்கநடவடிக்கையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அமேசான் மொத்த ஊழியர்களில் இது 1 சதவீதத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

அமேசானின் இந்த பணி நீக்க நடவடிக்கைகள் சில சில்லறை வர்த்தக பிரிவு, மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்த லே ஆஃப் திட்டத்தை பல மாத ஆய்வுக்குப் பின்னரே எடுப்பதாகவும் ஏற்கெனவே லாபமற்ற சில துறைகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அந்த அமெரிக்க நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com