ரஷ்யாவை விட்டு முற்றிலுமாக வெளியேறுகிறதா KFC?

ரஷ்யாவை விட்டு முற்றிலுமாக வெளியேறுகிறதா KFC?

உக்ரைனில் கிரெம்ளின் தாக்குதலுக்கு மத்தியில் அமெரிக்க துரித உணவு சங்கிலி KFC நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அதன் ரஷ்ய அவதாரமான ரோஸ்டிக்ஸ் தனது முதல் உணவகத்தை செவ்வாயன்று மாஸ்கோவில் திறந்தது.

ரஷ்யர்கள், சோவியத்துக்கு பிந்தைய ரஷ்யாவின் கொந்தளிப்பான ஆரம்ப ஆண்டுகளில் தோன்றிய பிராண்டான இந்த ரோஸ்டிக்ஸை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். ரஷ்யா முழுவதிலும் உள்ள அமெரிக்க நிறுவனமான இந்த முன்னாள் உணவகங்களின் புதிய உரிமையாளர்கள் அந்த வேலையைத் துரிதமாகவும், உற்சாகமாகவும் செய்து வருகிறார்கள்.

சென்ட்ரல் மாஸ்கோவில் நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவில், அறிமுகப்படுத்தப்பட்ட அதன் புதிய லோகோவில் KFC துரித உணவுச் சங்கிலியின் நிறுவனர் கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் முகம் இல்லை, ஆனால் லோகோவில் KFC யின் சிக்னேச்சர் நிறங்களெனக் கருதப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தன.

ரோஸ்டிக்கின் முதல் ரெஸ்டாரெண்ட் அதன் முதல் வாடிக்கையாளர்களை மாலை 5 மணிக்கு வரவேற்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ரோஸ்டிக் முதன்முதலில் 1993 இல் தொடங்கப்பட்டது, இது கடந்த இரண்டு தசாப்தங்களாக ரஷ்யாவில் KFC விரிவாக்கத்திற்கு உதவியது. பல ரஷ்யர்களுக்கு, 1991 இல் சோவியத் யூனியனின் சரிவைத் தொடர்ந்து ஒரு தடையற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறிய ரஷ்யாவின் கொந்தளிப்பான ஆரம்ப நாட்களின் நினைவுகளை ரோஸ்டிக்ஸின் வருகை தோற்றுவித்திருக்கக் கூடும்.

கடந்த வாரம், KFC யின் தாய் நிறுவனமான யம் பிராண்ட்ஸ் ரஷ்யாவில் இருந்து விலகியது. பின்னர் அதன் தற்போதைய ரஷ்ய வணிகமானது, உள்ளூர் உரிமையாளரான Smart Service க்கு விற்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் தற்போதைய ஊழியர்களை ரஷ்யாவில் தக்க வைத்துக் கொள்ள ஸ்மார்ட் சர்வீஸ் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க தாய் நிறுவனம் கடந்த வாரம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ஸ்மார்ட் சர்வீஸ் தனது உணவு சேவையின் தொடக்கமாக முதலில் ரஷ்யாவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட KFC உணவகங்களை ரோஸ்டிக் உணவகமாக மாற்றும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"மாஸ்டர் ஃப்ரான்சைசராக, ஸ்மார்ட் சர்வீஸ் ரஷ்யாவில் உள்ள மற்ற உரிமையாளர்களுடன் இணைந்து ரோஸ்டிக் நிறுவனத்திற்கு மறுபெயரிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்."

இதுவரையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்களுடன், KFC ரஷ்யாவின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலியாக இருந்தது.

புதிய உணவகங்களின் மெனு அல்லது வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்று ஸ்மார்ட் சேவையின் இணை-தலைமையாளர் கான்ஸ்டான்டின் கோடோவ் கூறினார்.

"எங்கள் முக்கிய குறிக்கோள், ஆரம்ப நாட்களில் கொஞ்சம் அசெளகர்யத்தை உருவாக்கியேனும் புதிய பிராண்டை மக்கள் மனதில் பதிய வைக்க நாங்கள் முயற்சி செய்வோம்... அதன் சிறந்த நோக்கம், வாடிக்கையாளர்களை அவர்கள் எப்பொழுதும் இருந்த அதே உலகத்தில் மூழ்கடிக்க வேண்டும்." என்பதே!” என்று கோட்டோவ் ரஷ்ய வணிக செய்தித்தாள் RBK டெய்லியிடம் கூறினார்

பிப்ரவரி 2022 இல் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முடிவு பொருளாதார ரீதியாகப் பல்வேறு விதமான தடைகளை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தி வருகிறது.

போர்பூமியான ரஷ்ய நிலத்திலிருந்து ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டொனால்ட்ஸ் உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் வெளியேற்றத்தையும் அது தூண்டியது.

அதன் மற்றொரு விளைவாக ரஷ்யாவில் உள்ள முன்னாள் மெக்டொனால்டு உணவகங்கள் "Vkusno i tochka" ("சுவையான. முழு நிறுத்தம்") என மறுபெயரிடப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com