தீவு
தீவு

மும்பையில் உள்ள ஆடம்பரமான பிளாட்டை விட மலிவான விலைக்கு விற்பனைக்கு வந்த தீவு!

உங்கள் சிந்தனையுடனும் இயற்கையின் ஒலியுடனும் தனிமையான இடத்தில் நேரத்தைக் கழிக்க, உங்களுக்கு ஏற்ற விலையில், சொந்தமாகத் தனித் தீவு வேண்டுமா? 

மத்திய அமெரிக்காவில் உள்ள இந்த வெப்பமண்டல தீவு விற்பனைக்கு உள்ளது. அதுவும் மும்பையில் உள்ள ஒரு ஆடம்பரமான பிளாட்டின் விலையை விட மலிவானது ஆகும். 

இகுவானா தீவு நிகரகுவாவின் புளூஃபீல்ட் கடற்கரையிலிருந்து 19.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரிமலைப் பகுதியில் உள்ளது. இது £376,627 என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த தீவின் மொத்த பரப்பளவு ஐந்து ஏக்கர். இதில் தென்னை மரங்கள், வாழை மரங்கள், மூன்று படுக்கையறை வீடு ஒன்று மற்றும் 28 அடி கண்காணிப்பு கோபுரம் ஆகியவை உள்ளது. இது உங்களுக்கு வெறும் 3.75 கோடியில் கிடைக்கும். 

வீட்டை வாங்குபவருக்கு கூடுதல் வசதிகளாக நீச்சல் குளத்திற்கு போதுமான இட வசதியும் மற்றும் மேற்கு பகுதியில் கப்பல்துறை ஒன்று மீன் பிடிக்கவும் படகோட்டத்திற்கும் ஏற்றவாறு உள்ளது. 

தி மெட்ரோ யுகேவின் கருத்துப்படி, இத்தீவு உலகின் பிற பகுதிகளிலிருந்து முழுமையாக துண்டிக்கப்படவில்லை மற்றும் அங்கு மொபைல் நெட்வொர்க்குடன் Wi-Fi இணைப்பும் உள்ளது. 

தீவில் எந்த இடையூறும் இல்லாமல் தொலைக்காட்சி சமிக்ஞைகளும் கிடைக்கிறது. மேலும் ஊழியர்களும் பணியாளர்களும் உங்கள் சேவைக்குக் காத்திருக்கிறார்கள்.  

இது மட்டும் இல்லாமல் ஒரு ஆன்-சைட் மேலாளர் உரிமையாளர்களுடன் தீவில் தங்க கூட தயாராக உள்ளார். 

இந்தியாவில் உள்ள முதல் அடுக்கு நகரங்கள், கடற்கரைக் காட்சியுடன் இருக்கும் சொகுசு குடியிருப்பை உங்களுக்கு வழங்கலாம் ஆனால் இகுவானா தீவு ஒரு கடற்கரைக் காட்சியைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், ஒரு விடுமுறை வாசஸ்தலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

நீங்கள் இன்னும் கொஞ்சம் முதலீடு செலுத்தினால், நீங்கள் ஒரு படகு வாங்கி கடலில் பயணம் செய்து விடுமுறையின் முழு இன்பத்தையும் இங்கே அனுபவிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com