அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு எம்மி விருது!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு எம்மி விருது!

ஆமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தன் பதவிக் காலத்துக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ்:நெட்பிளிக்ஸில் வெளியான நேஷனல் பார்க் தொடரை தொகுத்து வழங்கினார். இதை அவர் சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக, ஒபாமாவுக்கு எம்மி விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவிமிஷேல் ஒபாமாவும் 'ஹையர் கிரவுண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் 'அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்' என்ற தலைப்பில் ஆவணப் படம் எடுத்தனர்.

இந்த ஆவணப் படத்தில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காங்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. இந்த தொடரை பராக் ஒபாமா தொகுத்து வழங்கியுள்ளார். மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடர் நெட்பிளிக்ஸில் கடந்த ஏப்ரலில் வெளியானது.

இந்நிலையில் சிறந்த தொகுப்பாளருக்கான எம்மி விருது ஒபாமாவுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிவைட் டி.எய்சன்ஹோவர் கடந்த 1956-ம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com