அமெரிக்க ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம்: தலைவராக இந்தியர்!

 அமெரிக்க ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம்: தலைவராக இந்தியர்!

அமெரிக்காவில் பிரபலமான ஸ்டார்பக்ஸ் காபி விற்பனை நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக லெட்சுமணன் நரசிம்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

-இதுகுறித்து ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

இதற்கு முன்பாக இவர் ரெக்கிட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த ஹாவர்டு சுல்ஸ் என்பவருக்கு பதிலாக இப்போது அந்த பதவிக்கு  லெட்சுமணன் நரசிம்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் அக்டோபர் 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். மேலும் ஸ்டார்பக்ஸ் நிறுவன இயக்குநர்கள் குழு உறுப்பினராகவும் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியுள்ள அவரது 30 ஆண்டுகால அனுபவம் எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் லெட்சுமணன் நரசிம்மன், மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் கடந்த 1967ஆம் ஆண்டு பிறந்தவர்.

அங்குள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, ஜெர்மனில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்ஏ மற்றும் பெனிஸ்லவானியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ ஆகிய படிப்புகளையும் முடித்தார்.

மேலும் 2012-ல் பெப்சிகோ நிறுவனத்தின் பன்னாட்டுக் கிளைகளின் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றியவர். பிரிட்டன் பிரதமர் அலுவலக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் லெட்சுமணன் செயல்பட்டுள்ளார்.

இறுதியாக, ரெக்கிட் நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார் லெட்சுமணன் நரசிம்மன் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com