ஒரே நேரம் 7 பேருக்கு தூக்கு தண்டனை: குவைத் நாட்டில் அரங்கேற்றம்!

ஒரே நேரம் 7 பேருக்கு தூக்கு தண்டனை: குவைத் நாட்டில் அரங்கேற்றம்!

குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றம் மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குவைத் அரசுக்குச் சொந்தமான 'குனா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேருக்கு மரண  தண்டனை விதிக்கப் பட்டது. அந்த வகையில் இந்நாட்டு  மத்திய சிறைச் சாலையில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 7 பேரும் நேற்று தூக்கிலிடப்பட்டனா்.

இந்த மரண தண்டனை நிறைவேற்றப் பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் ஆகியோர் அடங்குவா்.

-இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொலைக் குற்றத்துக்காக இந்த 7 பேருக்கும் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com