லாரி டிரைவருக்கு அடித்த லைஃப் டைம் லாட்டரி பரிசு!
அமெரிக்காவைச் சேர்ந்த ராபின் ரீடல் என்ற லாரி ஓட்டுநருக்கு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இந்திய மதிப்பில் ரூ.82 ஆயிரம் பரிசுத் தொகையாகக் கிடைக்கும் லைஃப் டைம் செட்டில்மெண்டான லாட்டரி பரிசை வென்றுள்ளார்.
ஓரிகானில் டிரக் ஓட்டுநரான ராபின் ரீடல் தன்னுடைய வாழ்க்கையை மாற்றும் வகையிலான Life time Jackpot லாட்டரி அடித்துள்ளது. அலாவுதீன் அற்புத விளக்கிலிருந்துவரும் அதிர்ஷ்டங்களை தரும் பூதம் போல், லாரி ஓட்டுநர் ராபினுக்கு தற்போது இந்த Life time Jackpot லாட்டரி அடித்துள்ளது. பொதுவாக ஒருவரை ஒரு நாளில் பணக்காரர்களாக உயர்த்தும் லாட்டரிகளை வென்றவர்களின் கதைகள் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அமெரிக்க உள்ள ஓரிகான் மாநிலத்தை சேர்ந்த ராபினுக்கு லாட்டரி பரிசை வென்றுள்ளார். இந்த லாட்டரியில் என்ன சிறப்பம்சம் என்றால், வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 82 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமல்லாது இப்பரிசை வென்றதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 42 லட்சத்திற்கு மேல் ராபினுக்கு பரிசு தொகை வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Life time Jackpotயை வென்றதன் மூலம், தன்னுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்த்துவிடும் என்பதால் ஓரிரு ஆண்டுகளில் ஓட்டுநர் வேலையிலிருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார் ராபின்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் இதுபோன்ற மிகப்பெரிய ஜாக்பாட்களை வெல்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தம்பதியினர் ஒருமுறை அல்ல, வாரத்தில் இரண்டு முறை லாட்டரியை வென்றனர், இதனால் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் வென்றனர்.