சீனாவில் வரப்போகும் லூனார் நியூ இயர் பண்டிகை! கலக்கத்தில்  ஜின்பிங்!

சீனாவில் வரப்போகும் லூனார் நியூ இயர் பண்டிகை! கலக்கத்தில் ஜின்பிங்!

சீனாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கும் லூனார் நியூ இயர் கொண்டாட்டங்களுக்கு முன்னதாகப் பல லட்சம் மக்கள் பெரு நகரங்களில் இருந்து கிராமங்களில் இருக்கும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். வருடத்திற்கு ஒரு முறை நீண்ட கால விடுமுறையுடன் வரும் இந்த லூனார் நியூ இயர் பண்டிகை.

லூனார் நியூ இயர் பண்டிகைக்குச் சொந்த ஊருக்குச் செல்லும் மக்களைத் தடுக்க முடியாது. ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான 40 நாள் காலத்தில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணங்கள் மேற்கொள்ளவார்கள் என்று சீன போக்குவரத்து அதிகாரிகள் கணித்துள்ளனர். சீனா முழுவதும் 30.2 மில்லியன் மக்கள் பயணம் செய்ததாகச் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருக்கும் நிலையில் இந்தப் பண்டிகை மூலம் பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் சீன கிராமப்புறங்களுக்குச் செல்லும் காரணத்தால் கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதை கண்டு கவலைப்படுகிறேன் என்று ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

சீனாவில் பெரும் நகரங்களில் மட்டுமே தற்போது அதிகளவில் கொரோனா தொற்று இது கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவும் நிலை உருவாகியுள்ளது.சீனாவில் எதிர்வரும் நீண்டகால விடுமுறை கண்டு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அச்சத்தில் உள்ளார். கடந்த மாதம் பொருளாதாரத்தை முடக்கி, நாடு தழுவிய மக்கள் போராட்டம் மூலம் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளூர் அதிகாரிகளிடம் நாட்டின் கிராமப்புறத்தில் கொரோனா தொற்று பரவுவதைக் குறித்துக் கவலைப்படுவதாகக் கூறினார். மேலும் அனைத்து விதத்திலும் உள்நாட்டு அரசுகள் நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் கிராமபுறத்தில் கொரோனா தொற்று அதிகமானால் கட்டாயம் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பெரு நகரங்களில் போதுமான கட்டமைப்பு இருந்தாலும் சமாளிக்க முடியாமல் மக்கள் தரையில் படுத்துச் சிகிச்சை பெற்று வரும் நிலை தான் உள்ளது. இந்த நிலையில் சீனாவின் கிராமங்களிலும் தொற்று அதிகரித்தால் நிலைமை மோசமாகி விடும் எனத் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com