தேவாலயத்தின் கதவு திறக்காததால் தாமதமான பெண்ணின் திருமணம்!

தேவாலயத்தின் கதவு திறக்காததால் தாமதமான பெண்ணின் திருமணம்!

திருமணங்கள் வேடிக்கைகள் நிறைந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளாகும். திருமணம் குதூகலத்துடனும், மனநிறைவுடனும் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், சில நேரங்களில் நாம் திட்டமிட்டபடி எதுவும் நடக்காது. ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்து அதிர்ச்சி அல்லது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அது மணமக்களிடமும் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் மறக்க முடியாதவையாக இருக்கும்.

அப்படியொரு சம்பவம் பிலிப்பின்ஸில் நடந்துள்ளது. பிலிப்பின்ஸை சேர்ந்தவர் ஆனி மேரி சியோகோ. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாள் குறிக்கப்பட்டது.

மாஸ்பட் நகரில் உள்ள ஒரு பழமைவாய்ந்த கிறிஸ்துவ தேவாலயத்தில் திருமணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. திருமணத்தன்று புத்தாடை அணிந்து நகைகள் அலங்காரத்துடன் அந்த மணப்பெண், தேவாலயத்துக்கு காரில் வந்து இறங்கினார்.

ஆனால், தேவாலயத்துக்குள் செல்ல மணப் பெண் காத்திருந்த நிலையில் பழமையான கிறிஸ்துவ தேவாலயத்தின் வாசல் கதவு திறக்கமுடியாமல் சிக்கிக் கொண்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் முழுபலத்தை செலுத்தி கதவை திறக்க முயன்றும் எதுவும் நடக்கவில்லை. பின்னர் வேறு ஆட்களை வரவழைத்து கதைவைத் திறந்தனர். இதற்கு சில நிமிடங்கள் ஆனது.

இதனால், மணமகள் உள்ளே செல்ல காலதாமதம் ஆனது. ஆனாலும், மணப்பெண் மற்றவர்களைப் போல் பீதியடையாமல் தேவாலயத்தின் வாசலிலேயே பொறுமையாக காத்திருந்தார். இது தொடர்பான விடியோ வைரலாகி வெளியிடப்பட்டுள்ளது.

திருமண ஏற்பாட்டாளர்கள் மட்டும் தக்க சமயத்தில் உதவியிருக்காவிட்டால், என்னால் விடியோ படங்களை எடுத்திருக்க முடியாது என்று விடியோகிராபர் சைலீ தெரிவித்தார். “தேவாலயத்தின் கதவுகள் திறக்கப்படாத நிலையில், இந்த திருமணம் நடக்கவேண்டாம்” என்று சொல்வதைப்போல் இருந்தது. ஆனால், நல்லவேளையாக உதவியாளர்கள் வந்து கதவைத் திறந்து திருமணம் நடக்க உதவினர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்பாராமல் இந்த சம்பவம் நடந்துவிட்டாலும், திருமணம் குறித்த நேரத்தில் மிக நேர்த்தியாக நடைபெற்றது. இது ஒரு வெற்றித் திருமணம். திருமண நிகழ்வை பலரும் உற்சாகத்துடன் ரசித்தனர் என்றும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com