விமான நிலையத்திலேயே 18 வருட தங்கி மறைந்த 'லார்ட் ஆல்ஃபிரட்'!

ஆல்ஃபிரட் மெஹ்ரன்
ஆல்ஃபிரட் மெஹ்ரன்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் விமான நிலையத்திலேயே 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஈரான் நாட்டுக்காரரான கரிமி நாசேரி என்பவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவரது மறைவுக்கு விமான நிலைய ஊழியர்களும், காவல் துறையினரும் இரங்கல் தெரிவித்து, அவருக்கான இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

 ஈரான் நாட்டுக்காரன கரிமி நாசேரி என்பவர், கடந்த 1974-ம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்தார். அங்கு படிப்பு முடித்து

ஈரான் திரும்பிய அவரை அந்நாடு ஏற்கவில்லை. அவருக்கு, இங்கிலாந்து அரசும் குடியுரிமை தரவில்லை. அதனால் அவருக்கு விசா, பாஸ்போர்ட் எதுவுமின்றி, வேறுவழியின்றி பாரிஸ் விமான நிலைய வளாகத்திலேயே தங்கத் தொடங்கினார்.  சுமார் 18 ஆண்டுகள் அங்கு வசித்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.

 இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விமான நிலைய வளாகத்தின் குறிப்பிட்ட பகுதியில் மெஹ்ரான் கரிமி நாசேரி தங்கியிருந்தார். அவரை  நாங்கள் செல்லமாக 'லார்ட் ஆல்ஃபிரட்' என்று அழைப்போம்.

விமான நிலையம் வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிவந்தார். பாவம்.. அவருக்கு கடைசி வரை எந்த நாடும் பாஸ்போர்ட், விசா வசதிகள் செய்து தரப்படவில்லை. கடைசிவரை ஏமாற்றத்துடனே மெஹ்ரான் கரிமி நாசேரி இறந்தார்’' என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com