ரஷ்யாவை விட்டு வெளியேறியது மெர்சிடிஸ் பென்ஸ்! 

மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ்

 ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 9 மாதங்களுக்கு மேலாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தம் கிளைகளை மூடிவிட்டு வெளியேறத் துவங்கியுள்ளன. 

அந்த வகையில் உலகிலேயே மிகவும் லக்சரி கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ்,  ரஷ்யாவில் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டு அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலை எதிர்த்துப் பல நாடுகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார நடவடிக்கையும் எடுத்துள்ளன. உச்சக் கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கும் இந்த போரானது அணு ஆயுதப் போராக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஆடம்பர ஆட்டோமொபைல் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளது. அதேபோல் நிஸான், ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் தமது சேவைகளை நிறுத்தி உள்ளது.  

தற்போது ரஷ்யாவை விட்டு முழுமையாக வெளியேறி விட்டதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாங்கள் முழுமையாக வெளியேற இந்த போர் தான் காரணம் என நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com