செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாதல்லா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI நிறுவனத்துடன் பல ஆண்டுக்கு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்..

இன்று உலகமே வியந்து பார்த்து வரும் ஆன்லைன் சேட்பாட் ஆன ChatGPT-ஐ உருவாக்கிய நிறுவனம் தான் இந்த OpenAI. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நிறுவனத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போது செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பிரிவில் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்ய உள்ளது என்பது தற்போது கணிக்கப்பட்டுள்ளது. அதன் சந்தை கணிப்புகள் மற்றும் ஆய்வுகள் படி சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

மைக்ரோசாப்ட், OpenAI நிறுவனத்தில் ஏற்கனவே 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது, இந்த நிலையில் புதிய முதலீடுகள் மூலம் மைக்ரோசாப்ட் எதிர்கால வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence)தொழில்நுட்பமும், OpenAI நிறுவனம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரிகிறது.

மைக்ரோசாப்ட், OpenAI நிறுவன கூட்டணியில் மனிதர்களின் கேள்விகளுக்கு டெக்ஸ்ட், இமேஜ், மற்றும் இதர மீடியா மூலம் பதில் அளிக்கிறது OpenAI நிறுவனத்தின் generative artificial intelligence. OpenAI நிறுவனத்தின் ChatGPT நவம்பர் மாதம் அறிமுகமாகிப் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

உலகின் டாப் டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆயிரம் ஊழியர்களைக் கடந்த 6 மாதத்தில் பணிநீக்கம் செய்துள்ள வேளையில் தற்போதும் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக் சேவை துறையில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த மாற்றத்தில் இருக்கும் வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் மைக்ரோசாப்ட் தற்போது 12000 ஊழியர்கள் பணிநீக்கத்திற்குப் பின் சர்வதேச டெக் உலகை ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு துறையில் artificial intelligence. பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது என்பது அதன் ஊழியர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com