அமெரிக்காவில் 6 வங்கிகளின் ரேட்டிங்கை  குறைத்த மூடிஸ்!

அமெரிக்காவில் 6 வங்கிகளின் ரேட்டிங்கை குறைத்த மூடிஸ்!

சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி பேங்கிற்கு அடுத்தப்படியாக திவாலான சிக்னேச்சர் வங்கி மீதான டெபிட் ரேட்டிங்-ஐ மோசமான மதிப்பீடான C என அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இனி இந்த வங்கிக்கு எவ்விதமான ரேட்டிங்ம் அளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மூடிஸ் ஒரு நிறுவனத்தின் நிதி நிலையை அடிப்படையாக கொண்டு பல முக்கியமான காரணிகளை ஆய்வு செய்து டெபிட் ரேட்டிங் கொடுக்கும். இந்த ரேட்டிங் அனைத்து முதலீட்டாளர்கள், நிதி சேவை அளிப்பவர்கள் முக்கியமானதாக கருதுகிறது. இந்த நிலையில் 6 அமெரிக்க வங்கிகளின் ரேட்டிங்கை குறைக்க மறுஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

சுமார் 6 அமெரிக்க வங்கியின் ரேட்டிங்க்கை குறைக்க ஆய்வுக்கு வைத்துள்ளது , அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிக்கான் வேலி பேங்கிற்கு அரசின் உதவி மூலம் பெரும் சரிவு தடுக்கப்பட்டது. ஆனால் இந்த 6 வங்கிகளின் ரேட்டிங்-ஐ குறைத்தால் அமெரிக்க நிதியியல் சந்தை ஆட்டம் கண்டு விடும் என்கிறார்கள்.

மூடிஸ் அமைப்பு அமெரிக்காவில் திவாலான சிக்னேச்சர் வங்கி மீதான டெபிட் ரேட்டிங்-ஐ மோசமான மதிப்பீடான C என அறிவித்துள்ளதை தொடர்ந்து ரிபப்லிக் பேங்க் , சியங் பேங்க் கார்ப்ரேஷன், வெஸ்டர்ன் அல்லியன்ஸ் பேங்க், கொமெரிக்கா , UMB பைனான்சியல் கார்ப்ரேஷன் , இன்டிரஸ்ட் கார்ப்ரேஷன் ஆகிய 6 வங்கிகளின் ரேட்டிங்கை குறைக்க மறு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சியின் தாக்கம் மிகவும் பெரியது, என்பதால் பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்பு அமெரிக்க அரசு அனைத்து SVB டெபாசிட் கணக்குகளின் பணத்தை முழுமையாக அணுக அனுமதி அளித்துள்ளது மட்டும் அல்லாமல் அவசர நிதிக்கு அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com