மிஸஸ் வேர்ல்டு பட்டம்
மிஸஸ் வேர்ல்டு பட்டம்

மிஸஸ் வேர்ல்டு பட்டம்; இந்தியாவின் சர்கம் கவுசல் வென்று சாதனை!

இந்தியாவின் சர்கம் கவுசல் (32)  ‘மிஸஸ் வேர்ல்டு’ பட்டத்தை வென்று சாதனை சாதனை படைத்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த பட்டத்தை இந்திய வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது. .

ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட சர்கம் கவுசல், விசாகப்பட்டினத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடற்படை வீரராவார்.

திருமணமானவர்களுக்கான ‘திருமதி உலக அழகி’  போட்டி 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அமெரிக்காவின் லாக் வேகஸ் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 63 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும், கனடா நாட்டு பெண்மணி 3-வது இடத்தையும், பாலினேசியா நாட்டு பெண் 2-வது இடத்தையும் வென்றனர். அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை சேர்ந்த பெண்தான் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்று கணிக்கப் பட்ட நிலையில், ‘மிஸஸ் வேர்ல்டு’ பட்டம் வென்றதாக இந்தியாவின் சர்கம் கவுசல் அறிவிக்கப்பட்டு, அவரது தலையில் உலக அழகிக்கான கிரீடம் வைக்கப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் அதிதி கோவித்ரிகர் இந்த பட்டத்தை வென்றார். அதையடுத்து 21 ஆண்டுகள் கழித்து இப்போது சர்கம் கவுசல் வென்றுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலிருந்து சர்கம் கவுசலுக்கு இப்போதே அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com