1 யூரோ பணத்துக்கு நிறுவனத்தை விற்றது நிசான் மோட்டார்ஸ்!

1 யூரோ பணத்துக்கு நிறுவனத்தை விற்றது நிசான் மோட்டார்ஸ்!

ரஷ்ய அரசு நிறுவனத்திடம் வெறும் 1 யூரோ தொகைக்கு தங்கள் நிறுவனத்தை நிசான் மோட்டார் நிறுவனம் விற்றுள்ளது. சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தினத்துக்கு மொத்தமாக  687 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக  என தெரியவந்துள்ளது.

ஜப்பான் மோட்டார் நிறுவனமான நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அந்நாட்டு அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது. ஆனால், 6  ஆண்டுகளுக்குப் பிறகு  தங்கள் நிறுவன பங்குகளை மீண்டும் திரும்பப் பெறும்  உரிமையும் நிசான் நிறுவனம் பெற்றுள்ளதாக சொல்லப் படுகிறது.

உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல முக்கிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது நிசானும் இணைந்துள்ளது.

மாஸ்கோவில் அமைந்துள்ள நிசான் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மற்றும் மார்க்கெட்டிங் கம்பெனி ஆகியவை NAMI வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிசான் நிறுவனத்தின் 43% பங்குகளை வைத்துள்ள ரெனால்ட் நிறுவனத்துக்கு இந்த ஆண்டின் நிகர வருமானத்தில் 331 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com