இனி உங்களுக்கு ஸ்னாக்ஸ் கிடையாது போங்கடா! கூகுள் அதிரடி முடிவு!

இனி உங்களுக்கு ஸ்னாக்ஸ் கிடையாது போங்கடா! கூகுள் அதிரடி முடிவு!

சமீபத்திய அறிக்கையின் படி, இலவச தின்பண்டங்கள், லாண்டரி, மசாஜ் மற்றும் மதிய உணவு வழங்கும் மைக்ரோ கிட்சன் உட்பட கூகுள் அதன் நிறுவன அளவிலான பல சலுகைகளை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிறந்த பணியிடம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மிகச் சிறந்த நிறுவனங்களுள் ஒன்றாக கூகுள் மதிப்பிடப்பட்டிருந்தது. தன் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வந்தது. இந்த சலுகைகள் நிறுவனத்திற்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால், தனது ஆடம்பர செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இலவச தின்பண்டங்கள் சலவை சேவைகள், மசாஜ் மற்றும் நிறுவன மதிய உணவு வழங்கும் மைக்ரோ கிட்சன் உள்பட கூகுள் பல சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. மேலும் புதிய பணியாளர்களை சேர்க்கும் செயல்முறையையும் மெதுவாக்கியுள்ளது.

கூகுளின் தலைமை நிதி அதிகாரியான ரூத் போர்ட், நிறுவனம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் கவனம் செலுத்துவதற்கு நிதியைத் திறமையாகக் கையாள வேண்டும் எனக் கூறினார். இது தொடர்பாக கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோவில், நிறுவனம் தனது பணியமர்த்தல் வேகத்தை குறைத்துள்ளது. தனிப்பட்ட உபகரணங்களான மடிக்கணினி போன்றவை நிறுத்தப்படும். ஒவ்வொரு அலுவலகத்தின் இருப்பிடம் மற்றும் போக்குகளைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கான செலவுகள் குறைக்கப்படும் என்று போர்ட் கூறினார்.

மைக்ரோ கிச்சன் குறைந்த அளவு உபயோகிக்கப்படும் நாட்களில் அவற்றை முழுமையாக மூடவும், ஊழியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி வகுப்பு அட்டவணைகளை மாற்றவும் கூகுள் யோசித்து வருகிறது. ஊழியர்களுக்கு தின்பண்ட குறைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகத் தோன்றினாலும், தேவையில்லாத மிஷின் பயன்பாடு மற்றும் பிற மேம்பாடுகளுக்கு ஆதரவாகவே இதை தாங்கள் செய்வதாக நிறுவனம் கூறுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, சுமார் 12000 கூகுள் ஊழியர்களைக் குறைத்து, நிறுவனத்தின் வேலைகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்களுக்கு முன்னுரிமை அளித்து வழிநடத்தப்படும் என்று கூறினார். இந்த செய்தியானது சலுகைகளை விரும்பும் கூகுள் ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்யாமல் இருந்தாலும், நிறுவனம் தனது நிதியை சேமித்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமான நடவடிக்கையாகும்.

கூகுள் ஊழியர்களுக்கான சில சலுகைகள் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்றும், தேவையில்லாமல் வீணாகும் பொருட்களைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூகிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com