வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்!

உலகம் சமாதானமாக இருக்க வேண்டும். மக்கள் சுபிட்ஷமாக இருக்க வேண்டும் என்பதில், மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் சில நாடுகளின் செயல்பாடுகளும் போக்குகளும், உலகைப் பேரழிவிற்கு அழைத்துச் சென்று விடுமோ என்ற அச்சத்தைக் கிளப்புகிறது.

பலநாடுகள், தங்களின் பாதுகாப்பிற்கு என்று, ஆயுதபலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இதில் 'அணு ஆயுதங்களும்' அடக்கம்.

கடந்த 2022ஆம் ஆண்டில், 'வடகொரியா' இதுவரை ஏவிச் சோதித்த ஏவுகணையில் கால்பங்களவிற்கு, நிறைய சோதனைகள் நடத்தியிருக்கிறது. இது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் இருக்கிறது. வடகொரிய அதிபர், 'கிம் ஜாங் உன்', கடந்த 2022 ஆம் ஆண்டு, வடகொரியாவை சக்திவாய்ந்த, அணுஆயுத நாடாக அறிவித்திருக்கிறார்.

சென்ற 2017ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர், 'டொனால்டு டிரம்ப்' வடகொரியாவிற்கு, கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்ததால் பதற்றம் நிலவியது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கொரிய தீபகற்பத்தைப் பதற்றம் சூழ்ந்துக் கொண்டது.

2022ஆம் ஆண்டில், தென்கொரியாவைத் தாக்கக்கூடிய அளவில், குறுகியதூர ஏவுகணைகளையும், ஜப்பானைத்தாக்க, நடுத்தரதூர ஏவுகணைகளையும், இறுதியில்,'ஹ்வாசாங்-17', என்ற கண்டம் விட்டு பாயும், ஏவுகணையையும் வெற்றிக்காரமாக சோதித்து வெற்றிக் கண்டது. இந்த ஹ்வாசாங்-17 ஏவுகணை, அமெரிக்காவின் எந்த இடத்தையும் தாக்கக் கூடிய வல்லமை கொண்டது.

கடந்த செம்டம்பரில், வடகொரியாவை, சக்தி வாய்ந்த, அணுஆயுத நாடாக அறிவித்தப்பிறகு, கிம் ஜாங்க் உன், அணு ஆயுதங்கள் போருக்கு மட்டுமல்லாது, வெல்வதற்குப் போருக்கு முன்னாலும் பயன் படுத்தலாம், என்று கூறி அச்சத்தைக் கிளப்பினார்.

கடந்த ஆண்டு ஆயுதங்களுக்காக நிறைய செலவிடப்பட்டது. இந்த 2023 ஆம் ஆண்டில், அதிக அளவு ஆயுதங்கள் தயாரிக்க, வடகொரிய அதிபர் முடிவெடுத்திருக்கிறார். அதிலும் தென்கொரியாவைத் தாக்குவதற்கான, சிறியரக அணுஆயுதங்களைத் தயாரிக்கவும் முடிவாகியிருக்கிறது. இது முக்கிய வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார், சர்வதேச அமைதிக்கான 'கார்னகி' அறக்கட்டளையின் தலைவர் 'அங்கித் பாண்டா'.

இந்தப் புத்தாண்டின் முதலிலேயே, உளவு செயற்கைக் கோள்களைத் தயாரிக்க, வடகொரியா முனைப்பில் உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவைத் தாக்க, இன்னும் சிறப்பாக, வடிவமைக்கப்பட்ட, சிறியரக அணுஆயுதங்களைத் தயாரிக்க இருக்கிறது.

தென்கொரியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால், அவ்வப்போது சிறிய சிறிய சலசலப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் வடகொரியா, சீனா, ரஷியா போன்ற நாடுகளோடு இணக்கமாக இருப்பது, அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்காவின் உதவியோடு, வடகொரியாவின் எந்த நடவடிக்கைக்கும் பதிலடி கொடுப்போம் என்று கூறியிருக்கிறார், தென் கொரிய அதிபர் 'யூன் சுக்-யோல்'.

இந்த ஆண்டு , ஐ.நா.சபையின் எச்சரிக்கைகளை மீறி, ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அணு ஆயுத தடை பேச்சுவார்த்தைக்கும் வர கிம் ஜாங் மூன் மறுத்து விடுவார். அமெரிக்காவையும், தென்கொரியாவையும் போரில் சந்திக்க வடகொரியாவால் முடியும் எனும் பட்சத்தில் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வார்.

இதனிடையே, கொரோனா தொற்றை எதிர்த்து, ஒரு போராட்டமும் வடகொரியா அதிபர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த 2023 ஆம் ஆண்டு, வடகொரியாவின், தீவிர செயல்பாடுகள், உலக அரங்கில் ஒரு அச்ச உணர்வைக் கிளப்பும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com