கோழி முட்டை.. ஒன்றரை கோடி முட்டை; கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி!

முட்டை
முட்டை

கத்தார் நாட்டில் இப்போது உலக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், வீரர்களின் உணவுத் தேவைக்காக தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலிருந்து, தினமும் ஓன்றரை கோடி முட்டைகள் கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

 இந்தியாவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், பல நாடுகளுக்கும் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அந்த வகையில் அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கத்தாரில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால், அங்கு முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்திலிருந்து கத்தாருக்கு தினமும் ஒன்றரை கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்ய நாமக்கல் மாவட்ட முட்டை ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் முட்டை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள துருக்கி நாட்டில் ஒரு பெட்டி முட்டை 36 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் நாமக்கல் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com