அரண்மனை ரகசியம்… டியூக் ஆண்ட்ரூவும் அவரது 72 கரடி பொம்மைகளும் பக்கிங்ஹாம் பேலஸிலிருந்து நிரந்தர வெளியேற்றம், ஏன்?

அரண்மனை ரகசியம்… டியூக் ஆண்ட்ரூவும் அவரது 72 கரடி பொம்மைகளும் பக்கிங்ஹாம் பேலஸிலிருந்து நிரந்தர வெளியேற்றம், ஏன்?

1837 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அதிகாரப் பூர்வ இருப்பிடமாகக் கருதப்படும் பக்கிங்ஹாம் அரண்மனையானது உலக மக்கள் அனைவரும் அடையாளம் காணத்தக்க முதன்மையான லேண்ட்மார்க் மட்டுமல்ல, கிங் சார்லஸின் தாயாரும் மறைந்த முன்னால் பிரிட்டிஷ் மகாராணியுமான எலிஸபெத் -2 வைப் போலவே அவரது மகனும் இந்த அரண்மனையை ‘ஃப்ளாட் அபவ் தி ஷாப்’ (அதிக வருமானம் தரக்கூடிய கட்டுமானங்களில் ஒன்று – பொதுவாக கீழே கமர்ஷியல் உபயோகங்களுக்கு வாடகைக்கு விடப்படும் ஃப்ளாட்டுகளுக்கு மேலே கட்டப்படக் கூடிய வீடுகளுக்கு விலையும், வாடகையும் அதிகமாகவே தீர்மானிக்கப்படும். இதைத்தான் Flat above the shop என்கிறார்கள்.) ஆகவே கருதுவதால், தன் தாயார் காலத்தில் இது எவ்விதமாகப் பயன்பாட்டில் இருந்ததோ அதே விதமாகவே தன்னுடைய அதிகாரப்பூர்வ பணியிடமாகவும், அரசு குடும்பத்தின் கேளிக்கை நிகழ்வுகள், விழாக்களை நடத்தும் இடமாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாகவுமே வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்கின்றன அரண்மனை வட்டாரத் தகவல்கள்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்று தனித்தனியாக அதிகாரப்பூர்வ ஷ்யூட் அறைகள் உண்டு(ஆடம்பர வசதிகள் அனைத்தும் நிறைந்த அறைகள்). அந்தந்த அறைகளுக்கு உரியவர்களின் உரிமையை ரத்து செய்ய அரசருக்கும், அரசிக்கும் அதிகாரம் உண்டு. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது பரம்பரை பெருமைக்கும், கெளரவத்திற்கும் பங்கம் வரும்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் போது இவ்விதமாக அவர்களுடைய உரிமைகள் ரத்து செய்யப்பட்டு அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுவது வழக்கம்.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கிங் சார்லஸின் இளைய சகோதரர் டியூக் அண்ட்ரூ அவ்விதமாகத் தற்போது பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியேற்றப் பட இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் கூறுகின்றன.

ஆண்ட்ரூ தனது பக்கிங்ஹாம் அறையை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என கிங் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரண்மனையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடந்து வருவதால் அரச குடும்பத்துக்குச் சொந்தமான வேறு இடத்தில் தங்கி இருக்கும் டியூக் ஆண்ட்ரூ இனி நிரந்தரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது. ஆண்ட்ரூ மீதான குற்றம் என்னவென்றால்? தன் மீது சுமத்தப்பட்டிருந்த எப்ஸ்டீன்

பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட விர்ஜினியா ஜியூஃப்ரி தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குள்ளாக அவுட் ஆஃப் தி கோர்ட் செட்டில்மெண்ட்டாக முடித்துக் கொண்டதில் அரச குடும்பம் மொத்தமும் அதிருப்தியில் இருந்தது.

இந்த வழக்கில் கிடைத்த சிவில் தீர்வின் மூலம் ஆண்ட்ரு குற்றத்தை ஒப்புக்கொள்வதாக அர்த்தம் கொள்ள முடியாது எனவும் , இளவரசர் ஆண்ட்ரூ எப்போதும் தன்னைக் குற்றமற்றவராகவே காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள் கருதுகின்றன. அரச குடும்பத்தின் கருத்தும் அதுவாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் தற்போது ஆண்ட்ரு வெளியேற்றத்துக்கு அதைக் காரணமாகக் கருத வேண்டியதாகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பக்கிங்ஹாம் அரண்மனையில் 1990 ஆம் காலகட்டம் வரை ஆண்ட்ரூவின் அதிகாரப்பூர்வ பணியாளர்களில் ஒருவராக இருந்த சார்லட் ப்ரிக்ஸ் என்பவர் தெரிவித்துள்ள ஒரு தகவல் மிகுந்த நகைப்புக்குரியதாயிருக்கிறது.

விஷயம் இது தான், ஆண்ட்ரு ஒரு கரடி பொம்மைப் பிரியர். அரண்மனையில் அவரது அறையில் அவருக்கென்று பிரத்யேகமாக மிகப்பெரிய கரடி பொம்மை கலெக்ஷன் உண்டு. அதில் அப்போதே மொத்தம் 72 கரடி பொம்மைகள் இருந்தன. அந்த பொம்மைகளைத் தனது படுக்கையில் எப்படி அடுக்க வேண்டும் என ஆண்ட்ரு தான் சொல்வார். அதில் அவருக்கு எளிதில் திருப்தி கிட்டாது. மீண்டும், மீண்டும் அவர் சொல்லும் விதமாக அவற்றை அடுக்கச் சொல்லி உயிரை வாங்கி விடுவார். இதற்காக எனக்கு நாள் முழுக்க பயிற்சி கூட அளிக்கப்பட்டது. இப்போது ஆண்ட்ரூ அரண்மனையிலிருந்து வெளியேறுவது கூட எளிதாகி விடலாம்… ஆனால், அவரது 72 கரடி பொம்மைகளைத் தான் எப்படி வெளியேற்றி அவர் இஷ்டப்படி அடுக்குவார்களோ தெரியவில்லை! என்று அவர் கேலி செய்திருக்கிறார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் இதற்கு முன்பாக 1950 ஆம் ஆண்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் நெடுங்காலமாக அதில் பெரிய மாறுதல்களோ பராமரிப்புப் பணிகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது அந்த அரண்மனையின் நெடுங்கால ஆயுளுக்கு நல்லதல்ல என்பதால் தற்போது அதன் பராமரிப்புப் பணிகளை கிங் சார்லஸ் மற்றும் குயின் கமீலா முடுக்கி விட்டிருக்கிறார்கள். பணிகள் முழுமையாக முடிய குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் தேவைப்படலாம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com