பயணிகள் விமானம் விபத்து
பயணிகள் விமானம் விபத்து

தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து! 3 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி சென்ற பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில்

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர். விமானம் சுமார் 100 மீட்டர் (328 அடி) நடுவானில் இருந்தபோது, அது மோசமான வானிலை காரணமாக இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

பயணிகள் விமானம்
பயணிகள் விமானம்

இந்த விமான விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான விபத்தில் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com