சாண்டாகிளாஸ்
சாண்டாகிளாஸ்

சாண்டாகிளாஸ் வேடத்தில் பனிச்சறுக்கு விளையாடிய வீரர்கள்!

Published on

அமெரிக்காவில் சாண்டாகிளாஸ் தாத்தா போல் வேடமணிந்து, வீரர்கள் பனிச்சறுக்கு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டி வரும் இச்சமயத்தில் உலகின் பலவேறு நாடுகளிலும் கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவில் மெய்ன் மாநிலத்திலுள்ள நியூரி நகரில் பனிச்சரிவில், சாண்டாகிளாஸ்  வேடமணிந்த  200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்துள்ளனர். இக்காட்சி அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு, நிதி திரட்டுவதற்காக இந்நிகழ்ச்சி  நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.

logo
Kalki Online
kalkionline.com