வடக்கு கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.4!

வடக்கு கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.4!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் யுரேகா என்ற இடத்திற்கு அருகே தான் மிக சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் 16.1 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பெர்ன்டேல் என்ற பகுதியில் இருந்து மேற்கே-தென்மேற்கே 7.4 மைல்கள் பரப்பளவிற்கு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கி.மீ தொலைவில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் என நிலநடுக்கவியலாளர்கள் கூறுவதுடன், அடுத்த 30 ஆண்டுகளில் பரவலாக பேரழிவை ஏற்படுத்த கூடிய நிலநடுக்கம் ஏற்படுவது ஏறக்குறைய நிச்சயம் என்றும் எச்சரித்து உள்ளனர். இந்நிலநடுக்கம் எதிரொலியாக வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சிதறியுள்ளன. வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தூக்கி எறியப்பட்டன. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்த சரக்குகள் சிதறி கிடந்தன. இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து உள்ளன.

சிறிய அளவிலான 10-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களும் பின்னர் உணரப்பட்டு உள்ளன. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கா வீடுகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 17 ம் தேதி அமெரிக்காவின் மேற்கு பகுதியான டெக்சாஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை, மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் ஏற்பட்டது. இதிலும் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் சேதம், உயிர் பலி ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 என பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் அடுத்த 3 நாட்களுக்குள் கலிபோர்னியாவில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com