சாலமன் தீவு
சாலமன் தீவு

சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூகினியாவுக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு நாடான சாலமன் தீவுகளில் இன்று காலை 7.33 மணியளவில் 7.0 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.  இந்தநிலையில், இந்தோனேசியா அருகேயுள்ள சாலமன் தீவுகளின் தெற்கு மலாங்கோ பகுதியில் இன்று காலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. 

இதையடுத்து, நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலமன்ஸ் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம்  அடைந்தனர்.  இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com