
ஜப்பானில் சக்தி வாய்ந்த ‘நான்மடோல்’ புயல் கரையை கடப்பதால் கடலோரத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கிழக்காசிய நாடான ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா நகரை நேற்றிரவு (செப்டம்பர் 18) சக்தி வாய்ந்த 'நான்மடோல்' புயல் கரையை கடந்து, வடக்கு நோக்கி நகர்ந்தது. இதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
-இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா நகரை நேற்றிரவு (செப்டம்பர் 18) சக்தி வாய்ந்த 'நான்மடோல்' புயல் கரையை கடந்து, வடக்கு நோக்கி நகர்ந்தது.
இந்த சமயத்தில் மணிக்கு 162 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும், இந்தப் புயல் டோக்கியோ நகரில் நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலோரப் பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். பல நகரங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
-இவ்வாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.