கொரோனா
கொரோனா

கொரோனா சிகிச்சை ஒத்திகை: நாடு முழுவதும் நாளை நடக்கிறது!

நாடு முழுவதும் நாளை கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கான ஒத்திகைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டதாவது;

நாட்டில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை துரித கதியில் கையாள்வது குறித்து அனைத்து மாநிலங்களும் நாளை ஒத்திகை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள படுக்கைகள், சிகிச்சையளிக்க தேவையான ஊழியர்கள், மருத்துவ ஆக்சிஜனை எடுத்து செல்வது, விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்து உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொரோனா பாதித்தவர்களை முறையாக கையாள்வது மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவு  ஆக்சிஜன் கையிருப்பு குறித்தும் அதை விநியோகிப்பதில் முன்களப் பணியாளர்கள் முறையாக பயிற்சி பெற்றுள்ளதையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எத்தகைய அவசர நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com