மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த ரூபாய் நோட்டுகள் வெளியீடு!

ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு

இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் படம் இடம்பெற்ற முதல் நோட்டுகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் கடந்த செப்டம்பரில் ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு அந்நாட்டு மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார். இதையடுத்து மன்னர் சார்லஸின் உருவம் பொறித்த ரூபாய் நோட்டுகளை இங்கிலாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ராணி எலிசபெத் உருவம் பொறித்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும், படிப்படியாக இந்த புது நோட்டுகள் புழக்கத்துக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த நாணயங்கள் இந்த மாத ஆரம்பத்தில் ஏற்கனவே மக்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டதாக ராயல் மின்ட் தெரிவித்தது. தற்போதுள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளில் மன்னரின் உருவப்படம் இடம்பெற்றதாகவும், மேற்கொண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பண நோட்டுகளின் இந்த வடிவமைப்பு, சில வாரங்களுக்கு முன் மன்னரால் அங்கீகரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த புது நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் இங்கிலாந்தில் 2024-ம் ஆண்டில் மக்கள் உபயோகத்திற்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com