ஆஸ்கர் மேடையில் RRR படப் பாடல்!

ஆஸ்கர் மேடையில் RRR படப் பாடல்!

திரைப்பட உலகின் மிகப் பெரிய கௌரவமாக மதிக்கப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். உலகின் தலைசிறந்த படங்களுக்காக வழங்கப்படும் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி இம்மாதம் 12ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த வருடம் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் தெலுங்குப் படமான, ‘ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெறும், ‘நாட்டு நாட்டு’ பாடல் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது. இதற்காக ஆர்ஆர்ஆர் படக் குழுவினர் தற்போது இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்று உள்ளனர். அதோடு, இந்த வருடம் நடைபெற உள்ள இந்த ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சியில் அவர்கள், ‘நாட்டு நாட்டு’ பாடலை நேரடியாக மேடையில் பாடவும் உள்ளார்கள்.

ஆர்ஆர்ஆர் படத்தில் இந்தப் பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே ஆஸ்கர் மேடையில் இந்தப் பாடலை பாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. இந்தியக் கலைஞர்களுக்கு உலக அளவில் கிடைத்திருக்கும் ஒரு மிக மதிப்பு மிக்க நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com