விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம்
விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம்

விமானத்தில் நடு இருக்கை செலக்ட் செய்தால் ரூ. 1 கோடி பரிசு!

ஆஸ்திரேலியாவின் விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் பயணிகளுக்கு அசத்தல் ஆஃபர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தங்கள் விமானத்தில் நடு இருக்கையை தேர்வு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான தொகை ($230,000) பரிசளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 விமானத்தில் ஜன்னலோர சீட்தான் அனைவருக்கும் பிடித்தமானது. மேகங்களுக்கு மேலே பறந்து கொண்டு, கீழே தெரியும் ஊர்களை கழுகுப்பார்வை பார்ப்பது தனி சுகம்.  ஜன்னலோர சீட்டுக்கு அடுத்தபடியாக அனைவரின்  தேர்வு - கடைசி சீட்தான்! சட்டென்று எழுந்து செல்ல, கால்களை நீட்டி அமர விசாலமான இடம் கிடைக்கும்.

அதேசமயம் - விலை மலிவாக இருந்தாலும் எல்லோரும் தேர்ந்தெடுக்கத் தயங்குவது அந்த நடுஇருக்கைதான். காரணம் அங்கிருந்து ஜன்னல் காட்சியும் தெரியாது. நடந்து செல்லவும் வசதியில்லை. சவுகரியமாக அமரவும் முடியாது.  இதனால் விமான புக்கிங் தளத்தில் கடைசி நேரம் வரை நடு இருக்கை காலியாகவே இருக்கும்.

இந்த நிலையை மாற்றுவதற்காக ஆஸ்திரேலியா விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, நடு இருக்கையை தேர்ந்தெடுக்கும் பயணிகளின் பெயர்களை வாரம் ஒரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமான தொகை ($230,000) பரிசளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கான இலவச சுற்றுலா, பன்ஜி ஜம்பிங், ஹெலிகாப்டர் பயணம் என்று வேறு பல ஆஃபர்களையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com