ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது; உக்ரைன் விவகாரம்!

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா உக்ரைன் போர் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை ஐ.நா பொதுச் சபையில் நிராகரிக்கப்பட்டது. ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்த நிலையில், 39 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும், சீனாவும் வாக்களிக்காத நாடுகள்.

உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்ததைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின்மீது ஐ.நா பொதுச் சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யா கோரிக்கை வைத்தது.மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையில் நேற்று இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது.

விளாதிமிர் பூட்டின்
விளாதிமிர் பூட்டின்

இதன் மூலம் டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா ஆகிய பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைப்பதைக் கண்டிக்கும் தீர்மானத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்தது.

ஆனால், பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்புதான் நடத்தவேண்டும் என்று இந்தியா உட்பட 107 ஐ.நா உறுப்பு நாடுகள் வாக்களித்தனர். இதையடுத்து, ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com