மொத்த பணியாளர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்யும் Salesforce!

மொத்த பணியாளர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்யும் Salesforce!

தற்போது உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அதன் மொத்த ஐடி ஊழியர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்து வருவது வடிக்கையாகி உள்ளது. . இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரையில் இந்த பணி நீக்கமானது தொடர்ந்து வருவது பொருளாதார நிபுணர்களை கவலை கொள்ள வைக்கிறது. ட்விட்டர், அமேசான், மெட்டா மற்றும் பல நிறுவனங்கள் ஏற்கனவே பணி நீக்கத்தினை அறிவித்து விட்டன.

சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்களில் சேல்ஸ்போர்ஸ்ம் ஒன்று. இது அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 10% பேரை பணி நீக்கம் செய்துள்ளது.அந்த வகையில் தற்போது சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் சுமார் 7000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இது போன்று பணி நீக்கம் செய்வது மிக வருத்தத்தினை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ்-க்கு அவர் அளித்த பேட்டியில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோப், 2 மணி நேரத்தில் 7000 பேரை பணி நீக்கம் செய்தது மோசமானதொரு யோசனை விவரிக்க முடியாத ஒன்றை நாங்கள் செய்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஹெ1 பி விசா ஊழியர்களும் அடங்குவர். அவர்களுக்கு புதிய வேலை தேடிக் கொள்ள 60 நாள் மட்டுமே உள்ளது. அப்படி 60 நாட்களுக்குள் அவர்கள் புதிய வேலை தேடிக் கொள்ளாவிட்டால், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com